
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் சில வீடியோக்கள் ஆச்சரியமானதாகவும் ஆபத்தானதாகவும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சோனம் தயா என்ற பெண் மருத்துவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் அவர் பிரபல நடந்த இயக்குனர் அடில்கான் என்பவருடன் சேர்ந்து டிங்டாங் டிங் என்ற என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவர் மிகவும் உற்சாகமாக குத்தாட்டம் போடுவது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
Is this safe for the child in womb?pic.twitter.com/BZvoWdUCIr
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) May 5, 2025
இதன் காரணமாக விமர்சனங்களுக்கு சோனம் தயா பதிலளித்தார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் ஒரு டாக்டர் என்பதால் எனக்கு எது பாதுகாப்பானது எது ஆபத்தானது என்பது நன்றாக தெரியும். கர்ப்பகாலத்தில் சரியான வழிகாட்டுதல்களுடன் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்வது உடலையும் மனதையும் வலிமைப்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தன்னம்பிக்கை மற்றும் தைரியம் போன்றவைகள் பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவுக்கு தற்போது நடிகைகள் பாக்கியஸ்ரீ, அஞ்சலி உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.