மும்பையில் உள்ள வாசை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனக்கு கடுமையாக வயிறு வலிக்கிறது என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதோடு அதிகப்படியான எடை இழப்புக்கும் ஆளாகியுள்ளார். இதனால் பயந்து போன சிறுவியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சிறுமியின் வயிற்றில் 50 சென்டிமீட்டர் நீளத்திற்கு தலைமுடி பந்து இருந்துள்ளது. அது சிறுமியின் குடலில் அடைத்தபடி இருந்துள்ளது. தீவிர சிகிச்சைக்குப் பின் சிறுமியின் வயிற்றில் இருந்த முடிப்பந்து அகற்றப்பட்டுள்ளது. சிறு வயது முதலே சிறுமிக்கு தனது தலைமுடியை சாப்பிடும் வினோத பழக்கம் இருந்துள்ளது.

இது சரி செய்ய வேண்டிய மனநோய் என்று கூறப்படுகிறது. இதனைப் பெற்றோர் கவனிக்காமல் விட்டதால் தான் சிறுமி தனது தலை முடியை சாப்பிட்டு சாப்பிட்டு இத்தகைய ஆபத்தான நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.