அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடைபெறுகிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டர்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள். அதிமுக 40க்கு 25 இடங்களில் வெற்றி பெறும், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாவதை பார்த்து வயிறு எரிகின்றது. இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை, மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.