கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரப்பூர்வ தகவலின் படி 126 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. கேரளா வங்கி என்பது கேரள மாநில அரசுக்கு சொந்தமான கூட்டுறவு வங்கியாகும். இந்த வங்கிக்கு கேரள மாநிலம் முழுவதும் கிளைகள் உள்ளன. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், உடைமைகளை இழந்தோர் மற்றும் வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரளா வங்கி அறிவித்துள்ளது.