ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்ட சொர்ணம் என்ற மூதாட்டியை அவருடைய மகள் அழைத்து சென்ற நிலையில் ஸ்ட்ரெச்சர் தராமல் அலைகழித்தனர். இதனால் அவருடைய மகள் சொர்ணத்தை அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கி சென்ற நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மற்றும் உறைவிட டாக்டர் ஆகியோருக்கு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா நோட்டீஸ் அனுப்பினார். இது தொடர்பான விசாரணை நடந்து முடிந்த நிலையில் இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் எடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஈரோடு அரசு மருத்துவமனையில் மீண்டும் அது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது கதிர்வேல் என்பவர் தன்னுடைய தாய் குமுதவை (60) சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இவருக்கு சர்க்கரை நோய் இருந்ததால் காலில் புண் ஏற்பட்டது. இதனால்நேற்று முன்  தினம் அறுவை சிகிச்சை செய்து கால் புண்ணை சுத்தம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் கதிர்வேல் தன்னுடைய தாயை ஸ்ட்ரெச்சர் அல்லது சர்க்கர நாற்காலியில் வைத்து கொண்டு செல்லுமாறு கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன் வராததால் தன்னுடைய தாயை அவரே சர்க்கரை நாற்காலியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.