நடிகை மாலதி சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமானார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார் .மேலும் கன்னட திரை உலகில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனக்கு நடந்த கசப்பான அனுபவம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க சென்றால் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் டார்ச்சர் செய்கிறார்கள்.

இளம் நடிகைகளுக்கு கூட பிரச்சினை இல்லை. என்னை போன்ற வயதான நடிகை தான் டார்கெட் செய்து துரத்துகிறார்கள். சம்மதிக்கவில்லை என்றால் செட்டில் மதிக்க மாட்டார்கள். ஆனால் அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஓகே சொன்னால் பிக் அப், டிராப், கேரவன் வசதி என்று ஏகப்பட்ட சலுகைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார்.