
நொய்டாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் நாயை நடமாட விட வேண்டாம் என்று வயதான தம்பதியினர் இரண்டு பெண்களிடம் கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த இரண்டு இளம் பெண்களும் வயதான தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அதில் ஒரு பெண் தம்பதியை கைநீட்டி அடித்துள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அந்த பெண்களை கேள்வி கேட்க துவங்கியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் நெட்டிசன்கள் தங்களின் கோபத்தை கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர். என்ன காரணமாக இருந்தாலும் வயதான தம்பதியை எவ்வாறு தாக்கலாம், முதியவர்களுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
https://x.com/gharkekalesh/status/1849681975155515467