வந்தே பாரத் ரயில்கள் விரைவில் ஸ்லீப்பர் கோச் ரயில்களுடன் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இவை மார்ச் 2024 ஆம் ஆண்டிற்குள் கிடைக்கும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஒரே இரவில் பயணிப்பவர்களுக்கு அதிகபட்ச வசதியை அளிக்கும் வகையில் ரயில் பெர்த்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் 857 பெர்த்கள் இருக்கும். இவற்றில் 823 பயணிகளுக்கும், 34 பணியாளர்களுக்கும் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மேல் பெர்த்திற்கு ஏறுவதற்கு படிகள், தானியங்கி கதவுகள், சிறந்த சஸ்பென்ஷன், கேபின் விளக்குகள் , ராஜ்தானி ரயில்களை விட ஒலி, ஜெர்க் குறைவாக இருக்கும். Vacuum கழிப்பறைகள், டிஜிட்டல் கதவுகள் இருக்கும். வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது