
வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான வீடு அமைந்துள்ளது. அமைச்சரும், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பியும் ஆந்திரா எல்லையோரம் இருக்கும் கிறிஸ்டியன் பேட்டையில் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று சோதனை நடத்தினர்.
இரண்டு இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். அது மட்டும் இல்லாமல் அமைச்சருக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் துரைமுருகனிடம் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்காக வந்தார்கள் ஒன்றும் இல்லை எனக் கூறி எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார்கள் என்று கூறினார்.