
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் வெளியே செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம், கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனையடுத்து தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.