
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மலைப்பகுதிகள் தேனி, தென்காசி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.