
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர், ராயப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வேலூர், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.