
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 16 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி வணிக சிலிண்டர் விலை 1980 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. முன்னதாக கடந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 1964 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. ஜூலை மாதம் முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வீட்டு பயன்பாடு சிலிண்டரின் விலை 818 ரூபாய் 50 காசுகளாக உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதியில் உள்ளனர்.