தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வணங்கான். இந்த படத்தில் ராதாரவி, சமுத்திரக்கனி, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் கதாநாயகனாக நடிப்பதற்கு சூர்யா தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சில காரணங்களால் சூர்யா படத்தில் இருந்து விலகியதால் யாரை கதாநாயகமாக தேர்ந்தெடுக்கலாம் என்று பாலா யோசித்தபோது அருண் விஜயை இயக்குனர் ஏ.எல்.விஜய் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து பாலா கூறுகையில், “அருண் விஜய் என்னோட மைண்ட்லியே இல்ல.

இயக்குனர் ஏ.எல்.விஜய் தான் அருண் விஜய் பற்றி சொல்லி ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார் என்று சொன்னார். அதன் பிறகு தான் அருண் விஜயை நேரில் சந்தித்து பேசினேன். அதன் பிறகு அவரை எனக்கு மிகவும் பிடித்து போனது. எனவே அருண் விஜயை வைத்து படத்தை தொடர முடிவு எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.