
பிரபல நடிகை ஜோதிகா கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் முறையாக பாலிவுட் சினிமா மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு அவர் ஹிந்தியில் நடிக்கவில்லை. இவர் தமிழில் கடந்த 1999 ஆம் ஆண்டு நடித்த வாலி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து முன்னணி நடிகையாக ஜொலித்தார். இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சினிமாவிலிருந்து பல வருடங்கள் விலகி இருந்த நிலையில் மீண்டும் 36 வயதிலேயே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். அவர் சமீபத்திய பேட்டியில் பேசியதாவது, எனக்கு தற்போது ஹிந்தியில் இருந்து பட வாய்ப்புகள் வருவது ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு தற்போது நல்ல கதைகள் கொண்ட பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக நல்ல கதைகள் அமையாததால் தான் நான் ஹிந்தியில் நடிக்கவில்லை. நான் தமிழ் மற்றும் ஹிந்தியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிப்பேன். எனக்கு வட இந்திய மற்றும் தென்னிந்திய ரசிகர்கள் என்று பிரித்துப் பார்ப்பது வருத்தம் அளிக்கிறது. தென்னிந்திய படங்களை வட இந்திய ரசிகர்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கிறார்கள். மேலும் அனைவரையுமே இந்திய ரசிகர்களாகவே பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.