விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் தங்கலான். பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விக்ரமின் மனைவியாக மலையாள நடிகை பார்வதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தங்கலான் திரைப்படம் முழுக்க முழுக்க வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக உருவாகி இருப்பதால் இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கு அவர் 20 கிலோவுக்கு மேல் உடல் எடை குறைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் 30 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர் இந்த படத்தின் வெற்றிக்குப் பின்பு சம்பளத்தை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.