
2023 – 24 ஆம் ஆண்டின் இறுதி நாள் மார்ச் 31ஆம் தேதி நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு வரி செலுத்துவது தொடர்பான அரசு கணக்கு வைத்துள்ள வங்கிகள் செயல்பட்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தப்பட்டது. ஏப்ரல் 1ஆம் தேதி இன்று முதல் வங்கி கணக்கில் புதிய தொடக்கம் இருக்கும். இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி திங்கட்கிழமை இன்று வங்கி கணக்குகள் முடிக்கப்பட உள்ளது.
அதனால் இன்று வங்கிகள் செயல்படும் எனவும் ஆனால் வாடிக்கையாளர்கள் சேவை இருக்காது எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டுள்ள மக்கள் இன்றைய தினம் அதனை தவிர்த்து கொள்ளவும். செவ்வாய்க்கிழமை நாளை முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.