
நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் பிரபல அரசியல்வாதிகளை கூட விட்டுவைக்காமல் டிவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாராவை வம்புக்கு இழுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ வைரலாகி உள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றிற்கு கஸ்தூரி அளித்த பேட்டியில், “நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று அங்கீகரிக்க முடியாது. என்னை பொருத்தவரை நடிகைகள் KP சுந்தராம்பாள், விஜயசாந்தி தான் லேடி சூப்பர் ஸ்டார்ஸ்.” என கூறியுள்ளார். அவரது பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.