அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் வெளிநாடு செல்வதற்கு முன் அனுமதி பெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் கடவுச்சீட்டு பெறவும், புதுப்பிக்கவும் தடைமை சான்று வழங்க அனுமதித்து 2013 வருடம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இது தவிர அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உண்டு. இருப்பினும் ஆசிரியர்கள் , பணியாளர்கள் வெளிநாடு செல்ல துறை தலைவரான பள்ளிக்கல்வி இயக்குனரிடம் மட்டுமே விடுப்பு அனுமதி பெற வேண்டும். இந்த விவகாரத்தில் 2007 ஆம் வருடம் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்ட விதிமுறைகளின் படி அதை பின்பற்றி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களும் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.