
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத்தில் உள்ள பல்லேகாவ்ன் பகுதியிலுள்ள ‘பட்டேல் ஜெனான் ஹவுசிங் பிராஜெக்ட்’ அடுக்குமாடி குடியிருப்பில், 12 வயது சிறுவன் மீது நடந்த கொடூரமான தாக்குதல் ஒரு சிசிடிவி வீடியோவால் அம்பலமானது. கடந்த ஜூலை 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், ஆண் ஒருவர் லிப்ட்டில் உள்ள சிறுவனை காரணமின்றி சரமாரியாக அடித்து, பின்னர் கையை கடித்தும், “வெளியில் சந்தித்து, அடித்துவிடுவேன்” என மிரட்டியதும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை அளித்த தகவலில், “என் மகன் 14வது மாடியில் இருந்து வகுப்பிற்குச் செல்லுவதற்காக லிப்ட்டில் வந்தான். 9வது மாடியில் லிப்ட் நின்றபோது, அவன் நண்பரின் தந்தை லிப்டில் ஏறினார். உடனே பேசாமலே அடிக்க ஆரம்பித்தார். தரையில் இறங்கியதும் கூட தாக்கியிருக்கிறார். இது குறித்து காவல்துறையில் புகார் கொடுத்தோம். ஆனால் அவர்கள் முதலில் சிறிய வழக்காகவே பார்த்தனர். நாங்கள் வலியுறுத்திய பிறகே எப்ஐஆர் பதிவு செய்தனர்” என கூறியுள்ளார்.
லிப்டில் இருந்த பெண்கள் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இடையீடு செய்த பிறகே தாக்குதலை அவர் நிறுத்தினார். தற்போது அந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, புகாரளித்த பெற்றோர்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேலும், குற்றவாளி மீது உடனடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளது.
ठाणे के अंबरनाथ इलाके से एक वीडियो सामने आया है जिसमे दिख रहा है कि जैसे ही एक 12 साल का बच्चा लिफ्ट का दरवाजा बंद करता है, तो एक शक्श लिफ्ट में घुसता है और बच्चे को बेरहमी से मारने-पीटने लगता है। इतना ही नहीं बल्कि वो बच्चे के हाथ को दांत से काट लेता है और बाहर मिलने पर चाकू से… pic.twitter.com/muOzVsFovX
— Report Bharat (@ReportBharat) July 9, 2025