
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 40 மாடி கட்டிடம் ஒன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதில் மேல் தளத்தில் உள்ள சில கட்டட பணிகளை முடித்துவிட்டு பணியாளர்கள் லிஃப்ட்டில் கீழே இறங்கியுள்ளனர். அப்போது லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்ததில் உள்ளே இருந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லிஃப்ட் அறுந்து விழுந்ததில் ஈடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.