
ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தில் மூர்த்தி(49) என்பவர் வசித்து வந்தார். தொழிலதிபரான மூர்த்தி சங்ககிரியில் உள்ள கார் விற்பனையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் வீடு திரும்பும் போது வேடசந்தூர் அருகே மர துண்டுகளை ஏற்றி சென்ற லாரி மீது மூர்த்தியின் கார் மோதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த மூர்த்தி மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். லாரி ஓட்டுனரான பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.