நடிகர் ராகவா லாரன்ஸ்  லைகா நிறுவனம் தயாரித்து வரும் ‘சந்திரமுகி- 2’ல் நடித்து வருகிறார். படம் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன், லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு தன்னுடைய சார்பில் ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதை லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதால், நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும், ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அவரது பெயரை கெடுத்துவிடக் கூடாது என்று பயந்து கொண்டேதான் நடித்தேன் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.