பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அரசியல் குறித்து கல்வி பயில ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அண்ணாமலை லண்டன் செல்ல உள்ள நிலையில் மாவட்ட தலைவர்கள் செய்ய வேண்டிய அரசியல் பணிகள் குறித்து சென்னை கமலாலயத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. லண்டன் செல்லும் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை லண்டனில் தங்கி இருப்பார் என்றும் கூறப்படுகிறது