இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான வர்ணனையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கினார். ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி குறித்து வர்ணனை செய்யும் போது ஹர்பஜன், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்  ஜோப்ரா ஆர்ச்சர் குறித்து  லண்டன் கருப்பு டாக்ஸி என்ற வார்த்தையை பயன்படுத்தினார். போட்டியின் வர்ணனையில் லண்டன் கருப்பு டாக்சிகளின் மீட்டரை போல ஜோப்ரா ஆச்சரின் மீட்டரும் அதிகமாகவே உள்ளது என்று ஹர்பஜன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து லண்டன் கருப்பு டாக்சியுடன் ஒப்பிட்டு பேசியது இனவாத கருத்து என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் ஹர்பஜனைக் கடுமையாக விமர்சித்து, அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், இந்த விஷயத்தில் ஹர்பஜன் இன்னும் ஒரு விளக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.