டெல்லியில் 2 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 1 கான்ஸ்டபிள் ஆகிய 3 பேரும் ஒரு வாலிபரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். பின் அவற்றை 3 பேரும் பிரித்துக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டிராபிக் போலீஸ் ஒருவர், வாலிபர் ஒருவரிடம் அவருக்கு பின்னால் இருக்கும் பெஞ்சில் பணத்தை வைக்குமாறு சைகை காட்டுகிறார்.

இதனால் அந்த வாலிபர் பணத்தை பெஞ்சில் வைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். இதையடுத்து வைக்கப்பட்ட பணத்தை 3 போலீஸும் பங்கு பிரிக்கின்றனர். அந்த வீடியோவில் 3 பேரின் முகமும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து அவர்கள் 3 பேரும் சஸ்பெண்ட் செய்தனர். அதோடு அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டெல்லியின் கவர்னர் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“>