சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் 12 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிடைத்தது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா நிருபர்களை சந்தித்தார். அவர் பேட்டி கொடுத்த பிறகு உலக கோப்பையை மறந்து விட்டு அங்கிருந்து எழுந்து சென்றார். உடனே அவர் பின்னால் ஒருவர் ரோகித் ரோகித் என்று கூறியபடியே ஓடினார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

https://x.com/desisigma/status/1898948673624756656?t=aMclF0L_lw07zyjgZ6y-kw&s=19