விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஜெர்சி நம்பர் ஆனா 45 மற்றும் 18 ஆகியவற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்னாள் வீரர் ராபின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இப்படியே ஒவ்வொரு ஜெர்சி நம்பருக்கும் ஓய்வு கொடுத்து விட்டால் எதிர்காலத்தில் இளம் வீரர்களால் அவர்களுக்கு பிடித்த நம்பரை கூட ஜெர்சியில் எழுத முடியாது என்றும் ஏற்கனவே நம்பர் பத்து மற்றும் ஏழு ஆகிய ஜெர்சி எண்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு விட்டது, என்னை பொருத்தவரை இது சரியான அணுகுமுறை கிடையாது என்று ராபின் தெரிவித்துள்ளார்.