மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரத்லாம் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. அதாவது போட்டி தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வரும் நிலையில் இங்கு பெண் காவலர் ஒருவர் தன்னுடைய யூனிபார்மில் ‌ அந்த நிறுவனத்திற்கான விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் மேலதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதைத்தொடர்ந்து அந்த பெண் காவலரை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதோடு இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு தக்க முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதி கொடுத்துள்ளார். மேலும் அவர் போலீஸ் உடையில் நடித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.