
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டியில் விமர்சையாக நடந்து முடிந்தது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உணர்ச்சி பொங்க ஆவேசமாக பேசினார். அவர் அரசியல் கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். மாநாட்டில் விஜயின் கம்பீரமான பேச்சைக் கேட்டு தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். அவர் பேசும்போது அரசியல் எல்லாம் நமக்கு எதுக்குங்க என்று நானும் நினைத்தேன்.
நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்று தான் நானும் நினைத்தேன். ஆனால் நாம் மட்டும் நல்லா இருக்கணும்னு நினைச்சா அது சுயநலம் இல்லையா? ஆனால் நம்ம வாழ வைத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருக்கிறது நல்ல விசுவாசம் இருக்குமா? ஒரு லெவலுக்கு மேல காசு சேர்த்து என்ன செய்யப் போகிறோம். எனக்கு இந்த வாழ்க்கையை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் அது ஒரு நல்லா இருக்குமா? இதுக்கு என்ன செஞ்சா தீர்வு வரும் யோசிச்சு முடிவு எடுத்த முடிவு தான் அரசியல் என பேசினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பில்டப் கொடுத்துவிட்டு கடைசியாக உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் ஈடுபட முடியாது என கூறிவிடுவார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் சினிமாவில் மட்டும் தொடர்ந்து எப்படி நடித்து வருகிறார் என விஜய் உள்ளிட்ட பல ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது ரஜினியை தான் மறைமுகமாக விஜய் விமர்சித்து உள்ளதாக சோசியல் மீடியாவில் இருதரப்பு ரசிகர்களும் மோதிக் கொள்கின்றனர்.