
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 40 வருடங்களுக்கு மேலானாலும் இன்றளவும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் வெற்றியின் மூலமாக மீண்டும் வெற்றி பெற ரஜினி அடுத்ததாக வேட்டையன் படத்திலும் நடித்தார். இந்த படமும் வணிக ரீதியாக வசூலை பெற்றது. இதனை தொடர்ந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஜெயிலர்-2படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இந்நிலையில் ரஜினிக்கு முடிவெட்ட ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பிரபலமான ஹேர் டிரஸ்ஸர்களில் மிகவும் முக்கியமான ஒருவர்தான் ஆலீம் ஹக்கீம். இவர் ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், ராம்சரண் என சினிமா நட்சத்திரங்கள் தொடங்கி விராட் கோலி, தோனி என கிரிக்கெட் வீரர்கள் வரை பல பிரபலங்களுக்கும் இவர்தான் ஹேர் டிரெஸ்ஸராக இருக்கிறார். சிகை அலங்காரம் மட்டுமல்லாமல் டாட் ஸ்டுடியோவுக்கு நடத்தி வருகிறார். தற்போது இவர் ஒரு முறை முடி வெட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் பிரபலங்களிடம் வாங்குகிறார். ஆனால் இவர் முதல் முதலாக தன்னுடைய தொழிலை தொடங்கும்போது இருபது ரூபாயில் தான் தொடங்கியுள்ளார். படிப்படியாக முன்னேறி தற்போது ஒரு லட்சம் ரூபாய் வாங்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறாராம்.