இன்றைய காலகட்டத்தில் நாம் உட்கொள்ளும் சில உணவுகள் நமக்கு ஆபத்தாக மாறிவிடுகின்றன. இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் சில நேரங்களில் பெரும் ஆபத்தை விளைவித்து விடுகிறது. இந்த நிலையில் ICMR ஆன இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களில், ரொட்டி, வெண்ணெய், பாலாடை கட்டி ஆகியவை தீவிர பதப்படுத்தப்பட்ட உணவாக கருதப்பட வேண்டும்.

இதில் உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது மற்றும் பல ஆபத்தான நோய்களுக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால் தான் இவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப எதையும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.