தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள்  5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ரேஷன் அட்டையை அரிசி, சர்க்கரை அட்டையாக மாற்றுவதற்கு TNPDS என்ற பக்கத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் வேண்டாம் என்றால் தங்களுடைய அட்டையை பொருட்கள் இல்லாத அட்டையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

இதற்கு முதலில்  “இங்கே மாற்ற” என்ற ஒரு வாசகம் இருக்கும் அதை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு செல்லும். அங்கு ஏற்கனவே ரேஷன் கடையில் கொடுக்கப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் கீழ் இருக்கும் கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்த பின் செல்போனில் இருந்து ஓடிபி வரும். அதை பூர்த்தி செய்தால் குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான பக்கத்திற்கு செல்லும். இதில் குடும்ப அட்டை, குறியீடு போன்றவை இருக்கும்.

அதன் கீழ் அட்டை வகை மாற்றம் என்று இருக்கும். அதில் குடும்ப அட்டை முடக்கவும் , தடை நீக்கம் செய்வதற்கும், முகவரி மாற்றத்திற்கும் பல ஆப்ஷன் இருக்கும்.  ஆனால் அதில் அட்டை வகை மாற்றம் என்ற காலத்தை மட்டும் குறிப்பிட வேண்டும்.  அட்டை வகை சர்க்கரை அட்டையாக இருந்தால் சர்க்கரை அட்டை என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும். அரிசி அட்டை என்றால் அரிசி அட்டை என்று இருக்கும். இதில் நமக்கு தேவையானது நிரப்பி அதன் கீழ் இருக்கும் பகுதியை ஓகே செய்ய வேண்டும். இதனை அடுத்து இந்த தகவல்களை உணவுப் பொருட்கள் வழங்கும் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ரேஷன் கார்டு வழங்கப்படும்.