தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ம் தேதி ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்தல் போன்ற பல்வேறு நடைமுறைகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். மேலும் நியாயவிலை கடைகளில் கடந்த மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் போன்றவற்றைப் பெற தவறியவர்கள் ஜூலை மாதம் பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.