
நீங்கள் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும்போது உங்களை வேறு பொருள்கள் வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களா? அதனை மறுத்துவிட்டு உயர் அதிகாரிகளிடம் நீங்கள் புகார் செய்யுங்கள். புகார் செய்வதற்கான எண்கள் ரேஷன் கடையின் வெளியிலேயே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். தேவையில்லாத பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. ரேஷன் கடை ஊழியர்கள் சொல்வதை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.