தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய பாதுகாப்பு இருந்தாலும் பல ரேஷன் பொருட்கள் கள்ள சந்தையில் விற்பது மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரேஷன் கடை பொருட்களை பதுக்குதல் மற்றும் பிற மாநிலங்களுக்கு கடத்துதல் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் 18005995950என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி எண்ணை பயன்படுத்தலாம் என்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.