தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்ட பல்வேறு விதமான அத்யாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களை சென்றடைகிறது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் மாநிலம் முழுவதும் ரேஷன் கடைகள் செயல்படாது.

அதன் பிறகு வருகிற 18-ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினமும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. மேலும் இந்த வாரத்தில் மட்டும் இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால் பொருட்களை வாங்க செல்லும் பொதுமக்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.