
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் கோதுமை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில் ஒத்திசைவு பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக அன்றைய தினம் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது.
இந்நிலையில் இந்த மாதத்தின் கடைசி பணி நாளான 29ஆம் தேதி கடைசி சனிக்கிழமை ஆகும். இதைத்தொடர்ந்து மார்ச் 30-ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை. இதனால் அன்றைய தினங்களில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் பொது விடுமுறை என்பதால் பொதுமக்களின் நலன் கருதி வருகிற 29ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அன்றைய தினம் ரேஷன் கடைகளில் பொருட்களை வழக்கம்போல் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம்.