
மக்கள் ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை ஆகிய உணவுப் பொருட்களை இலவசமாக வாங்கி செல்கின்றனர். அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப கல்விகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படுகிறது. நிறைய பேர் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்காக பதிவு செய்தனர். ஆனால் தேர்தல் காரணமாக தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க நினைத்தவர்கள் நீண்ட காலமாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு பிரதான ஆவணம். ஆனால் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை அரசு தொடங்கியுள்ளது. அதில் விண்ணப்பங்களை சரி பார்ப்பதிலும் நேரம் அதிகமாக எடுக்கப்படுகிறது. முன்பை விட இப்போது அதிக நாட்கள் ஆவதால் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்காக மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிலர் தகுதி இல்லாமல் போலியான ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனால் அரசு விண்ணப்பத்தை சரி பார்ப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்கிறது. திருமணம் ஆகி தனி குடும்பமாக சென்ற பிறகு ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதற்கு திருமண சான்றிதழ், திருமண பத்திரிக்கை போன்ற ஆதாரங்கள் தேவைப்படுகிறது. ரேஷன் கார்டில் அந்த ஆவணங்களை வைத்து பெயர் நீக்கம் செய்தால் மட்டுமே புதிய கார்டில் பெயர் சேர்க்க முடியும்.
ஒருவருடைய ரேஷன் கார்டில் பெயரை நீக்குவதற்கு திருமண சான்று தேவை. உயிரிழந்தவராக இருந்தால் இறப்பு சான்றிதழ் தேவை. பெயர் நீக்கம் செய்யவும் அதிக காலம் ஆகிறது. இதனால் அந்த ஆவணங்களை வழங்குவதற்கும் பயனாளிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர். பெயரை நீக்கவும், புதிய கார்டில் பெயரை சேர்க்கவும் அதிக நாட்கள் ஆவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். 2023 ஆம் ஆண்டு 2.9 லட்சம் பேர் ரேஷன் கார்டு விண்ணப்பித்தனர்.
ஆனால் 1.3 லட்சம் ரேஷன் கார்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பை விட இப்போது ரேஷன் கார்டு விண்ணப்பித்து பெறுவதற்கு அதிக காலம் ஆவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். ஒருவர் செய்யும் தவறால் அனைவரும் பாதிக்கப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே கடுமையான விதிமுறைகளை தளர்த்தி அரசு விரைவில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.