பெங்களூரில் இருந்து திருப்பதி செல்வதற்கு விரும்பும் பக்தர்களுடைய வசதிக்காக ரேணிகுண்டா வரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட உள்ளது. வரும் பத்தாம் தேதிக்குள் அனைத்து ரயில் பெட்டிகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆறு நாட்களில் பெட்டிகள் தயாராகிவிடும். அதன் பிறகு ஒரு வாரத்திற்குள் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இதன் வழிதடத்தை கவனித்தால் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட், ஜோலார்பேட்டை, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது.

மொத்தம் 257 கிலோ மீட்டர் தூரம் வருகிறது.மணிக்கு 70  கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தால் மூன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும். இது குறித்து அடுத்த ஒரு வாரத்தில் மேலும் சில விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.