இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டலை விட மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தை தற்போது பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் ‌ தொலைத்தொடர்பு சேவையை ஏராளமானோர் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள் மலிவு விலையில் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது 91 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் அருமையான ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க உதவும். இந்த திட்டத்திற்கு டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால் வசதி போன்றவைகள் கிடையாது. அதற்கு தனியாகத்தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். மேலும் அதன்படி ஒரு நிமிட அழைப்புக்கு 15 காசு, ஒரு எம்பி டேட்டாவுக்கு ஒரு காசு, ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப 25 காசு வசூலிக்கப்படும்.