தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தை டைரக்டர் மகிழ்த்திருமேனி இயக்கி வருகிறார். இந்த படமானது அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விடாமுயற்சி படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித்குமார் அஜர்பைஜானில் படப்பிடிப்பு முடிந்த பின்பு ரூ.9 கோடி மதிப்புள்ள பெராரி கார் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அஜித் குமார் பெராரி கார் அருகில் நின்றவாறு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.