
இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்துக்கு பணியாற்ற விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான 142வது டெக்னிகல் கிராஜுவேட்கோர்ஸ் (TGC-142)க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் மே 29ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சம்பள விவரம்:
தேர்ச்சி பெறும் நபர்களுக்கு மாதம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். இது இந்திய ராணுவத்தில் வழங்கப்படும் உயர்ந்த ஊதிய அளவுகளில் ஒன்றாகும்.
கல்வித் தகுதி: பி.இ / பி.டெக் (அல்லது இறுதியாண்டு)
வயது வரம்பு: 20 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் முதலில் shortlisting செய்யப்பட்டு, அதன் பின்னர் SSB நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப தொடக்கம்: 30.04.2025 (மாலை 03.00 மணி)
கடைசி நாள்: 29.05.2025 (மாலை 03.00 மணி)
விண்ணப்பிக்கும் முறை:
அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindianarmy.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிக்க முன், முழு அறிவிப்பையும் கவனமாகப் படித்து, தகுதி மற்றும் தேவைகளை சரிபார்த்து பின்னரே விண்ணப்பிக்க வேண்டும்