திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த நவீன்குமார் (36) என்பவர், அவிநாசி நகர பாஜக முன்னாள் தலைவர் ஆவார். இவர், சோலைநகர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வாங்கித் தருவதாகக் கூறி, பல பொதுமக்களிடமிருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியதாக  கூறப்படுகிறது.

மொத்தமாக 20-க்கும் மேற்பட்டோர் இவரிடம் நம்பிக்கையுடன் பணம் கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், வீடு வாங்கித் தராமல் காலம் கடத்தியதாகவும்,  நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அவிநாசி சூளை பகுதியில் வசித்து வரும் ஆனந்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு நவீன்குமாரை கைது செய்தனர். தற்போது அவர் மீது மோசடி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.