
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக் இறுதி போட்டியில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டா.ர் இதனால் அவருடைய ஒலிம்பிக் பதக்க வாய்ப்பும் பறிபோனது. இதனால் வில் வித்தை போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாகஅறிவித்த வினேஷ் போகத் காங்கிரஸ் கட்சியிலிருந்து இணைந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றவருக்கு மாநில அரசின் விளையாட்டு கொள்கையின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வினேஷ் போகத்துக்கு வழங்கப்படும் என்று ஹரியானா மாநில அரசு தெரிவித்தது .
அதன்படி நான்கு கோடி ரொக்க பரிசை அல்லது நிலம் ஒதுக்கீடு அல்லது குரூப் Aவேலை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றை அவர் தேர்வு செய்யலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. தினேஷ் போகத் இப்போது ஒரு எம்எல்ஏவாக இருப்பதால் அவர் என்ன சலுகைகளை பெற விரும்புகிறார் என்று அவரிடம் கேட்டு அரசாங்ம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.