
தமிழகத்திலிருந்து கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. 30 லட்சம் ரூபாய் வரை கிட்னி தேவைப்படுபவர்களிடம் பேரம் பேசும் அந்த கும்பல் கிட்னியை வழங்குபவர்களுக்கு ஆறு லட்சம் மட்டுமே வழங்குகிறது.