
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தற்போது திமுக கட்சியின் அமைச்சர் த.மோ. அன்பரசன் மிகவும் விமர்சித்துள்ளார். இது குறித்து திமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது, கண்டவன் எல்லாம் அரசியலுக்கு வரப்போகிறான். ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்குகிறான். ஆனால் ரசிகர்களுக்காக ஒரு டிக்கெட் கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை. இவன் எல்லாம் அரசியலுக்கு வந்து எப்படி நாட்டை காப்பாற்றுவான்.
உன் ரசிகர்கள் தானே. உன் மேல பாசமா தான இருக்காங்க. அவங்களுக்கு இலவச டிக்கெட் தர வேண்டியதுதானே. ஆனால் கொடுக்க மாட்டான். ஒரு டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்பான். இவனா நாட்டை காப்பாற்றப் போகிறான் என்று ஒருமையில் பேசினார். மேலும் நடிகர் விஜயின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக திமுக அமைச்சர் அவரை விமர்சித்தது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.