மத்திய அரசு பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர் விபத்தில் சிக்கி காயம், நிரந்தர ஊனம் அடைந்தால் அல்லது உயிரிழந்தால் நாமினி காப்பீட்டுத் தொகையை பெறலாம். ஆண்டுக்கு 20 ரூபாய் பிரிமியத்தில் விபத்தில் உயிரிழந்தால் 2 லட்சமும், பார்வை இழந்தால் அல்லது நிரந்தர ஊனம் அடைந்தால் ஒன்று முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை காப்பீடு பெறலாம்.

இந்த திட்டத்தில் சேர https://jansuraksha.gov.in என்ற இணையதளம் மூலமாக அல்லது அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் நேரடியாக படிவத்தை பெறலாம். அதனை நிரப்பி கேட்கப்படும் ஆவணங்களுடன் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான ஆண்டு பிரீமியர் தொகை வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். கூடுதல் தகவல்களை அறிய https://www.myscheme.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.