
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் சிவகங்கை குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டு வெறும் 50 மில்லி லிட்டர் அளவிற்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் தற்போது விவாத பொருளாக மாறி உள்ளது.