
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் இன்று மாலை 3:30 மணியளவில் தொடங்கியது. ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் வாங்கி வரும் நிலையில் நாளையும் ஐபிஎல் மெகா ஏலம் தொடரும்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ராகுல் திரிப்பாட்டியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும் இதே போன்ற தென்னாபிரிக்க அணியின் வீரர் எய்டன் மார்க்ரமை 2 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.